முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே: வடிவேல் பாலாஜி குறித்து 'மாஸ்டர்' நடிகர் உருக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே… என ‘மாஸ்டர்’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக தெரிவித்துள்ளார்
சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி நேற்று முன்தினம் காலமானதை அடுத்து சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஜய் சேதுபதி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் நேற்று மாலை நுங்கம்பாக்கம் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது
வடிவேல் பாலாஜி அவர்களின் திடீர் மறைவு, சின்னத்திரை மற்றும் பெரிய திரைக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு இருக்கும் நிலையில், அவருடன் பணிபுரிந்த சக கலைஞர்கள் அவருடைய மறைவை இன்னும் ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். அந்த வகையில் வடிவேலு பாலாஜியால் தட்டிக்கொடுக்கப்பட்டு வளர்ந்து, தற்போது சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் காலூன்றி வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் தீனா.
கைதி, மாஸ்டர் உட்பட முக்கிய படங்களில் நடித்துள்ள தீனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேல் பாலாஜி குறித்து உருக்கமான கவிதை வடிவில் ஒரு போஸ்ட்டை பதிவு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
என்னை தட்டி கொடுத்த முதல் கை நீ….
என்னை பேச வைத்த என் குருவும் நீ…
அன்பை அள்ளி கொடுத்த என் அண்ணன் நீ….
அயராது உழைக்கும் ஒரு சிறந்த கலைஞன் நீ…
எங்களுக்கு நீ மறுபடியும் வேண்டும் எழுந்து வா .. இல்லையென்றால் பிறந்து வா…
முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே…
தீனாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments