பாரதிராஜா படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்!

  • IndiaGlitz, [Friday,May 24 2019]

இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்திலும் சசிகுமார் நாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் 'கென்னடி கிளப்'. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு புரமோஷன் செய்கிறார். பெண்கள் கபடி போட்டியை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார், பாரதிராஜா, காயத்ரி, சூரி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.