நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித்திக்காக பிரார்த்தனை செய்யும் நடிகர்!

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என நடிகர் தாமு செய்த பிரார்த்தனை செய்து வருகிறார்.

கடந்த 60 மணி நேரமாக சுர்ஜித்தை மீட்க ஒருபக்கம் தொழில்நுட்பங்கள் உதவியால் அதிகாரிகள் ஆலோசனை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழகம் முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சுர்ஜித்திக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில் மீட்புப்பணி நடைபெற்று வரும் நடுக்காட்டுப்பட்டியில் நடிகர் தாமு சுர்ஜித்திக்காக பிரார்த்தனை செய்து வருகிறார். இன்று காலை 8 மணி அளவில் நடுக்காட்டுபட்டிக்கு வந்த நடிகர் தாமு, சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் சுர்ஜித் விழுந்த ஆழ்துளை அருகே பள்ளம் தோண்டப்பட்டு வரும் இடத்தில் உரிய அனுமதி பெற்று தாமு அமைதியாக பிரார்த்தனை செய்தார். தாமு உள்பட லட்சக்கணக்கானோர்களின் பிரார்த்தனையால் சுர்ஜித் மீண்டும் வருவான் என்றே அக்கிராமத்தினர்களின் நம்பிக்கையாக உள்ளது