கமல், சூர்யா பட வில்லன் நடிகருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

கமலஹாசன், சூர்யா, தனுஷ் உள்பட பல பிரபலங்கள் நடித்த படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கமலஹாசன் நடித்த ’வேட்டையாடு விளையாடு’ சூர்யா நடித்த ’காக்க காக்க’ தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ உள்பட பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் பெரும்பாலானோர் குணமாகி ஒருசிலர் பலியாகி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது