நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்.. 48 வயதில் நடந்த சோகம்.. என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மறைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ’ஏப்ரல் மாதத்தில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான டேனியல் பாலாஜி, அதன் பின்னர் தனுஷ் நடித்த ’காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்த திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ’காக்க காக்க’ என்பதும் அதன் பிறகு ’வேட்டையாடு விளையாடு’ ’பொல்லாதவன்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்துடன் ’என்னை அறிந்தால்’ விஜய்யுடன் ’பைரவா’ போன்ற படங்கள் நடித்த டேனியல் பாலாஜி, கடைசியாக ’அறியவன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்த அவர் ‘சித்தி’ ’அழகி’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து காலமானார். அவருக்கு வயது 48. அவருடைய மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி திரை உலகிற்கு பெரும் இழப்பாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments