சபரிமலையில் நடிகர் சிரஞ்சீவியுடன் இளம் பெண் தரிசனமா? உண்மையில் நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கின் சூப்பர் ஸ்டார் நடிகரான நடிகர் சிரஞ்சீவி கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது. அந்தப் புகைப்படத்தில் இளமையான தோற்றத்துடன் ஒரு பெண் இடம்பெற்றிருந்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் “லுசிபர்“ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி தற்போது நடித்துவருகிறார். இதற்கிடையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு சென்ற அவர் கடந்த 13 ஆம் தேதி மனைவி சுரேகாவுடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் இவர்களுடன் பீனிஸ் குரூப்பின் உரிமையாளர்கள் சுக்கப்பள்ளி சுரேஷ், சுக்கப்பள்ளி கோபி மற்றும் அவர்களது மனைவிகளும் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர்.
அப்போது சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்ட நடிகர் சிரஞ்சீவி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில் நடிகர் சிரஞ்சீவியுடன் இளம்பெண் ஒருவரும் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டாரா? கோவில் நிர்வாகம் இதை எப்படி அனுமதித்தது என சமூகவலைத் தளங்களில் பரபரப்பு கிளம்பியது.
இதையடுத்து 50 வயதைக் கடக்காத ஒரு பெண் எப்படி கோவிலில் தரிசனம் செய்யலாம் என்கிற ரீதியில் சில விமர்சனங்களும் வைக்கப்பட்டு வந்தன. இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், மதுமதி என்பவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது உண்மை. அவர் 1996 ஆம் ஆண்டு பிறந்தவர். சபரிமலை ஆசார முறைப்படி அவர் 50 வயதை கடந்தவர். அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்த பின்னரே அவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தவறானது. தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மதுமதியின் மகன் அவிநாஷ் சுக்கப்பள்ளி தனது முகநூலில் எனது தாயாருக்கு 55 வயதாகிறது எனக்கு தற்போது 34 வயதாகிறது என்றும் விளக்கம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments