சமூக வலைத்தளத்தில் அறிமுகமான இளம்பெண்.. நிர்வாண பட ஆசை காட்டி நடிகரை ஏமாற்றிய சம்பவம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோ அனுப்புவதாக ஆசை காட்டி துணை நடிகர் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் பண மோசடி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த தாமோதரன் என்ற சினிமா துணை நடிகர் சமூக வலைதளம் மூலம் அகிலா என்ற பெண்ணுடன் நட்பு கொண்டிருந்தார். அவ்வப்போது இருவரும் குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருந்த நிலையில் திடீரென தனக்கு ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினால் ஆபாச வீடியோக்கள் அனுப்புவதோடு நிர்வாண வீடியோ காலில் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து சபலத்திற்கு ஆசைப்பட்ட தாமோதர கண்ணன் ஆயிரம் ரூபாய் அனுப்பிய நிலையில் அவரிடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை. அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மறுநாள் தாமோதரனை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், தான் சைபர் கிரைம் போலீஸ் பேசுவதாகவும் உன்னுடன் அடிக்கடி போன் மூலம் பேசி பழகிய அகிலா தற்கொலை செய்து கொண்டதாகவும் நீ ஆபாச வீடியோ கேட்டதால்தான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
உன் மீது சைபர் கிரைம் போலீஸ் சார்பில் நடவடிக்கை எடுக்க போகிறோம் என்றும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க 60 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டி உள்ளார். இதனை அடுத்து தன்னிடம் ரூ.13,000 மட்டுமே இருக்கிறது என்று கூறி கூகுள் பே மூலம் அந்த பணத்தை அனுப்பி உள்ளார். அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாமோதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments