கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நடிகர் சார்லி: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, விக்ரம், அஜித், விஜய், சூர்யா என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சார்லி. இவர் தற்போது திடீரென சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த புகாரில் நடிகர் சார்லி கூறியிருப்பதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றி வரும் நான், எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதி இன்றி, இன்று ட்விட்டரில் போலியாக கணக்கு துவங்கப்பட்டு உள்ளது. இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசின் காவல் துறைக்கு என் நன்றியும் வணக்கமும்’ என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

இன்று காலை நடிகர் சார்லி பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது என்பதும், அதனை பலரும் ஃபாலோ செய்வதாகவும் வெளி வந்த தகவலை அடுத்து நடிகர் சார்லி இந்த புகாரை காவல்துறையில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கோவையில் 3-ஆம் அலை...! வாட்ஸ்-அப் வதந்தியால் அலறும் மக்கள்.....!

கோவை மாவட்டத்தில் மூன்றாம் அலை துவங்கி விட்டதாக, பொய்யான செய்தி வாட்ஸ்-அப்பில் பரவியதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார்...!

பழனியின், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்தார்.

ஜகமே தந்திரம்-ஒரு பிரிட்டிஷ் படைப்பு… மனம் திறக்கும் சந்தோஷ் நாராயணன்!

தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய உள்ள “ஜகமே தந்திரம்’‘ திரைப்படம் வரும் ஜுன் 18 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா!

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்காகப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.

பெண்களை ஆபாசமாக பேசியதாக பிரபல யூடியூபர் மீது கிரைம் போலீசார் வழக்கு!

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளினால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பங்கள் அரங்கேறியது.