close
Choose your channels

எம்ஜிஆர் சகோதரராக நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்ஜிஆர் நடித்த ‘நாளை நமதே’ என்ற திரைப்படத்தில் அவருக்கு சகோதரராக நடித்தவர் நடிகர் சந்திரமோகன். 82 வயதான சந்திரமோகன் இன்று காலமானார்.

கடந்த 1975 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் சேது மாதவன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் ’நாளை நமதே’. இந்த படத்தில் அண்ணன் தம்பி என இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கும் நிலையில் இன்னொரு தம்பியாக பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் நடித்திருந்தார்

கடந்த 1966 ஆம் ஆண்டு ’ரங்குல ரத்னம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய சந்திரமோகன், அதன் பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல இயக்குநர் கே விஸ்வநாத் அவர்களின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த சந்திரமோகன் நந்தி விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். எம்ஜிஆருடன் ’நாளை நமதே’ கமல்ஹாசனுடன் ’நீயா’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இதய நோய் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரமோகன், இன்று காலை காலமானார். மறைந்த சந்திரமோகனுக்கு ஜலந்தர் என்ற மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.. அவரது இறுதி சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment