டிஸ்சார்ஜ் ஆனார் போண்டாமணி.. ரஜினி,அஜித், விஜய்க்கு வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போண்டாமணி செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னணி நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமணி என்பதும் இவர் பாக்யராஜ் இயக்கிய ’பவுனு பவுனுதான்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ரஜினி, விஜய், அஜித் உள்பட பல முன்னணி பிரபலங்களின் படங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணிக்கு தேவையான சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டார் என்பதும் அவருடைய மருத்துவச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி, தனுஷ் உள்பட பல பிரபலங்கள் போண்டாமணிக்கு நிதி உதவி செய்தனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ள போண்டாமணி, ‘நான் ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன் என்றும், விரைவில் எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் சினிமாத்துறையினர் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com