பிரபல தமிழ் நடிகர் இரட்டை குழந்தைகளின் 3வது பிறந்தநாள்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,August 09 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகளுக்கு இன்று மூன்றாவது பிறந்த நாளை அடுத்து அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் ’காதல்’ ’வெயில்’ ’கூடல்நகர்’ ’நேபாளி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பரத். தற்போது அவர் ஏழு திரைப்படங்களில் நடித்து பிசியாக நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜெஷ்லி என்பவரை பரத் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளின் மூன்றாவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து நடிகர் பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள பரத் அதில், ‘எனது இரண்டு செல்லங்களுக்கும் இன்று 3வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 3 வருடங்கள் ஆகிவிட்டன, நீங்கள் இருவரும் தினமும் மேலும் மேலும் வளர்ந்து வருகிறீர்கள். என்னால் நம்பவே முடியவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்.