நடிகர் பரத்தின் 50வது படத்திற்கு உதவி செய்த மோகன்லால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பரத். அதன்பின் காதல், எம் மகன், வெயில், பழனி, நேபாளி உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது 50வது படம் என்ற மைல்கல்லை தொட்டுள்ளார்.
பரத் நடிக்கும் 50-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளர். இந்த படத்திற்கு ‘லவ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பரத் ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார்.
ஆர்பி பாலா இயக்கத்தில், பிஜி முத்தையா ஒளிப்பதிவில், ரோன்னி ராப்பெல் இசையில், அஜய் மனோஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் பரத் 50வது படம் என்ற மைல்கல்லை தொட்ட நிலையில் அவருக்கு சக நடிகர்-நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Here’s the first look poster of the Tamil movie 'Love'. Best wishes to R P Bala, Bharath and the team behind this film. pic.twitter.com/wzQWmD5MQU
— Mohanlal (@Mohanlal) April 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com