நடிகர் பாலசரவணன் வீட்டில் கொரோனாவால் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் திரையுலகைச் சேர்ந்த ஒருசிலரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் பாலசரவணன் தந்தை கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரை உலகினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் பாலசரவணன் தந்தை எஸ்ஏ ரங்கநாதன் என்பவர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மதுரை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மறைந்த எஸ்ஏ ரங்கநாதன் அவர்களுக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திரையுலகினர் பாலசரவணன் குடும்பத்திற்கு இரங்கலும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.

கடந்த மே மாதம் பாலசரவணன் தங்கை கணவர் கொரோனாவால் உயிரிழந்தார் என்பதும் அவருக்கு வயது 32 மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்த பாலசரவணன் தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசம் அணிந்து இருங்கள் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கொரோனாவால் அவரது தந்தையும் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

பாஜக பிரமுகர் புகார் எதிரொலி: பிரபல நடிகை-இயக்குனர் மீது தேசத்துரோக வழக்கு!

பாஜக பிரமுகர் ஒருவர் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகை மற்றும் இயக்குனர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இணைந்த வரலட்சுமி!

பிரபல தெலுங்கு நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணா இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து

முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி: வைரல் புகைப்படம்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில சுகாதாரத்துறை

தமிழ் திரைப்பட நடிகைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்: என்ன காரணம்?

விஜயகாந்த் நடித்த 'அரசாங்கம்' கருணாஸ் நடித்த 'அம்பாசமுத்திரம் அம்பானி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு நாக்பூர் உயர்நீதிமன்றம் ரூபாய் இரண்டு லட்சம் அபராதம்

5 நிமிடம் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய மருத்துவமனை… 22 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று ஒரு தனியார் மருத்துவமனை முன்பு பொதுமக்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.