இதைவிட அன்பாக உரக்க கூற முடியுமா? தீபா வீடியோவுக்கு நடிகர் பாலசரவணன் டுவிட்
- IndiaGlitz, [Thursday,August 26 2021]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் தீபா என்பதும் இவர் தற்போது விஜய் டிவியில் உள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தீபா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அந்த போட்டியாளர்களில் ஒருவர் அவரது உருவத்தை கேலி செய்து உள்ளார். இதனால் கடும் வருத்தம் அடைந்த தீபா ’உருவத்தை வைத்து கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீ வேறு என்ன சொன்னாலும் நான் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு இருப்பேன் என்றும் கூறினார். மேலும் நாங்களும் ஒரு காலத்தில் ஒல்லியாகத் தான் இருந்தோம் என்றும் இரண்டு உயிர்களை நாங்கள் குடும்பத்திற்கு வாரிசாக கொடுத்ததால்தான் இவ்வாறு குண்டாகிவிட்டோம் என்றும் அவ்வாறு உயிர் கொடுத்து தியாகம் செய்த ஒரு தாயை எப்படி உருவத்தை வைத்து நீ கிண்டல் செய்யலாம் என்றும் கூறினார்
மேலும் என்னை நம்பி இரண்டு ஜீவன்கள் வீட்டில் காத்திருக்கின்றனர் என்றும் ஐஸ்வர்யாராயை அல்லது கிளியோபாட்ரோவோ வந்தால் கூட அவரை கட்டி பிடிக்க மாட்டார்கள் என்றும் நான் வந்தால் தான் கட்டிப்பிடிப்பார்கள் என்றும் அவர்களுக்கு நான்தான் அழகு என்றும் கூறினார்
உருவத்தை வைத்து கேலி செய்யும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு மனதில் படும் வகையில் மிகவும் அமைதியாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் தீபா தன்னுடைய கருத்தை எடுத்து வைத்தது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு கமெண்ட் அளித்துள்ள நடிகர் பாலசரவணன் கூறியிருப்பதாவது: இதற்கு மேல் இதை இவ்வளவு அன்பாகவும் அழகாகவும் உரக்க கூற முடியுமா என தெரியவில்லை…இனியாவது உருவக்கேலிகளையும் தொழில் சார்ந்த கேலிகளையும் தவிர்ப்போம் நண்பர்களே…. தலைவணங்குகிறேன் தாயே
ஆனால் வழக்கம்போல் இந்த வீடியோவும் பிராங்க் என்பது இந்த வீடியோவின் முடிவில் தெரிய வந்துள்ளதால் நெட்டிசன்கள் இந்த வீடியோவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதற்கு மேல் இதை இவ்வளவு அன்பாகவும் அழகாகவும் உரக்க கூற முடியுமா என தெரியவில்லை…இனியாவது உருவக்கேலிகளையும் தொழில் சார்ந்த கேலிகளையும் தவிர்ப்போம் நண்பர்களே….
— Bala saravanan actor (@Bala_actor) August 26, 2021
தலைவணங்குகிறேன் தாயே #DeepaAkka ????????????❤️❤️❤️❤️ https://t.co/MVzH39R8ug