அவரது வருத்தத்திற்கு இந்த ஒரு காரணம் தான்.. ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் பாலா மனைவியின் பதிவு..!
- IndiaGlitz, [Thursday,March 09 2023]
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா தற்போது உடல்நல குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கல்லீரலில் பிரச்சனை இருப்பதாகவும் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் பாலாவின் மனைவி எலிசபெத் தனது கணவரின் உடல்நிலை குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’கொச்சி மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை பெற்று வரும் பாலா தற்போது நலமாக இருக்கிறார், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. தான் நலமாக இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் பாலா கூறியுள்ளார். அவருடைய ஒரே வருத்தம் தனது உடல் நலம் குறித்து பரவி வரும் வதந்தி மட்டுமே. எனவே தயவு செய்து தேவையற்ற வதந்திகள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாலாவின் முதல் மனைவி அம்ருதாவும் மருத்துவமனைக்கு வந்து பாலாவின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.