அவரது வருத்தத்திற்கு இந்த ஒரு காரணம் தான்.. ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் பாலா மனைவியின் பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,March 09 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா தற்போது உடல்நல குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கல்லீரலில் பிரச்சனை இருப்பதாகவும் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

இந்த நிலையில் பாலாவின் மனைவி எலிசபெத் தனது கணவரின் உடல்நிலை குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’கொச்சி மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை பெற்று வரும் பாலா தற்போது நலமாக இருக்கிறார், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. தான் நலமாக இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் பாலா கூறியுள்ளார். அவருடைய ஒரே வருத்தம் தனது உடல் நலம் குறித்து பரவி வரும் வதந்தி மட்டுமே. எனவே தயவு செய்து தேவையற்ற வதந்திகள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாலாவின் முதல் மனைவி அம்ருதாவும் மருத்துவமனைக்கு வந்து பாலாவின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

More News

வெங்கட்பிரபுவிற்கு தெலுங்கில் வாழ்த்து கூறிய இளையராஜா.. எதற்கு தெரியுமா?

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு என்பதும் அவரது இயக்கத்தில் உருவான சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

மார்ச் 10ஆம் தேதி இத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா? முழு விபரங்கள்..!

 ஒவ்வொரு வாரமும் திரையரங்களில் அதிகபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதற்கு இணையாக ஓடிடியிலும் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

கமல்ஹாசன் - சிம்பு படத்தின் மாஸ் அறிவிப்பு.. செம வீடியோ வைரல்..!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை பார்த்தோம். 

மைதானத்தின் நடுவே பெண் வர்ணனையாளரை அலேக்காக தூக்கிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்..!

மைதானத்தின் நடுவே நிகழ்ச்சியின் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் பெண் வர்ணனையாளருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவரை அலேக்காக தூக்கிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் ஹீரோ இவர் தான்.. சூப்பர் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று செய்திகள் வெளியானதை பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் இந்த படம் குறித்த அறிவிப்பு