நடிகர் பால சரவணன் மகள் மளமளவென வளர்ந்துவிட்டாரே.. க்யூட் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Monday,June 26 2023]

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாலசரவணன் மகள் மளமளவென வளர்ந்து விட்டாரே என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த பால சரவணன், பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நிலையில் ‘குட்டிப்புலி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ’பண்ணையாரும் பத்மினியும்’ ’திருடன் போலீஸ்’ ’டார்லிங்’ ’இடம் பொருள் ஏவல்’ ’அதே கண்கள்’ ’கூட்டத்தில் ஒருவன்’ ’ஏமாளி’ ’தண்ணி வண்டி’ ’துணிவு’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ’தெய்வ மச்சான்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் பாலசரவணன், ஹேமா என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு கயலினி என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் மகள் கயலினியின் ஆறாவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய பாலசரவணன் இது குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:



கொஞ்சநஞ்ச சேட்டையா பண்றாங்க இவங்க.. ஆத்தாடி ஆத்தா.. அன்பு மகள் கயலினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. ஆள பிறந்தவளே.. உன் சேட்டை எல்லாம் வெற்றிகளாகும், மென்மேலும் வளரட்டும்.. சும்மா மிரட்டி விடு கயலு..’ என்று கூறியுள்ளார்.



இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து பாலசரவணனுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.