லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லுங்க ஆபீஸர்ஸ்: தமிழ் நடிகர் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் ’லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லு ஆபீசர்ஸ்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் காமெடி நடிகர் பாலசரவணன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: யாரைப் பார்த்தாலும் முழு ஊரடங்கு வரப்போகிறது. இல்ல அதுக்கலாம் வாய்ப்பேயில்லனு சொல்றாங்க. அத யோசிச்சே பல பேரு மன உளைச்சல்ல இருக்கிறது அவுங்க கிட்ட பேசும் போது தெரியுது. கேள்வி என்னனா முழு லாக்டவுன் வருமா வராதா? குறஞ்சபட்சம் இந்த பயத்துக்காவது பதில் சொல்லுங்க ஆபிஸர்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
யார பாத்தாலும் Full lockdown வரப்போது இல்ல அதுக்கலாம் வாய்ப்பேயில்லனு சொல்றாங்க...அத யோசிச்சே பல பேரு மன உளைச்சல்ல இருக்கிறது அவுங்க கிட்ட பேசும் போது தெரியுது....கேள்வி என்னனா Full Lock down வருமா வராதா??
— Bala saravanan actor (@Bala_actor) April 27, 2021
குறஞ்சபட்சம் இந்த பயத்துக்காவது பதில் சொல்லுங்க ஆபிஸர்ஸ்...
????????????????????
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com