'அண்ணாத்த' பட நடிகருக்கு 2வது திருமணம்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,September 05 2021]

’அண்ணாத்த’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஒருவருக்கு இரண்டாவது திருமணம் ஆனதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா, தமிழில் ’அன்பு’ ’காதல் கிசுகிசு’ ’மஞ்சள் வெயில்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். மேலும் அஜித் நடித்த ’வீரம்’ கார்த்தி நடித்த ’தம்பி’ உள்பட பல படங்களில் நடித்த இவர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நடிகர் பாலாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்ததாக தெரிகிறது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

நடிகர் பாலாவுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது என்பதும் அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.

More News

மீசையுடன் புது தோற்றம்: ஏ.ஆர்.ரஹ்மானின் வைரல் புகைப்படம்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் மணிரத்தினம் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்தில் அறிமுகமானது முதல் தற்போது வரை அவரை மீசை இல்லாமல் தான் அனைவரும் பார்த்திருக்கிறோம்.

சூர்யாவுக்கு பார்சலில் வந்த விருது: வைரல் வீடியோ

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், ஓடிடியில் ரிலீஸான போதிலும்

துபாய் மருத்துவமனையில் நர்ஸ்களுடன் படம் பார்த்த விஜயகாந்த்: வைரல் புகைப்படம்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்றார் என்பதும் அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் சென்றார்

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: 12 வயது சிறுவன் பலியானதால் அதிர்ச்சி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த பாதிப்பை விட தற்போது

அனுவை அடுத்து விஷ்ணு, பிரக்ரிதியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்ற வெள்ளைப் புலியைப் தத்தெடுத்தார் என்பது தெரிந்ததே. 10 வயதாகும் அந்த வெள்ளைப்புலிக்கு