ஒருவேளை நான் இறந்துவிட்டால்..? மனைவிக்கு நடிகர் பாலா கூறிய நெகிழ்ச்சியான விஷயம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் இன்று இரண்டாவது திருமண நாளை கொண்டாடி உள்ளார். அப்போது அவர் ஒருவேளை நான் இறந்துவிட்டால்? என தனது மனைவிக்கு ஒரு நெகிழ்ச்சியான விஷயத்தை கூறி இருக்கும் வீடியோ இணையதளங்களின் நேரலையாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வீரம்’ உள்பட பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்ட நிலையில் இரண்டாவது எலிசபெத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் சமீபத்தில் தங்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது வீடியோ ஒன்றில் பேசிய நடிகர் பாலா ’தான் விரைவில் ஒரு பெரிய ஆபரேஷன் செய்ய இருப்பதாகவும் அந்த ஆபரேஷன் ஒருவேளை தோல்வி அடைந்து நான் இறந்துவிட்டால் எனது மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் எனக்காக இத்தனை காலம் பிரார்த்தனை செய்த தன்னுடைய ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி’ என்றும் அவர் தெரிவித்தார். நடிகர் பாலாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments