அதர்வா வெளியிட்ட தளபதி விஜய்யின் வெளிவராத புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,April 20 2020]

தளபதி விஜய் மற்றும் நடிகர் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஆகிய இருவரும் சமீபத்தில் உறவினர் ஆனார்கள் என்பது தெரிந்ததே. தளபதி விஜய்யின் உறவினரும் தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது விஜய் மற்றும் அதர்வா குடும்பத்தினர் உறவினர்கள் ஆகி உள்ள நிலையில் சற்றுமுன் அதர்வா தனது சமூக வலைத்தளத்தில் விஜய்யுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய்யின் புன்சிரிப்புடன் கூடிய இந்த புகைப்படம் இதுவரை வெளிவராத புகைப்படம் என்பதால் சமூக வலைத்தளங்களில் உடனே வைரலாகிவிட்டது.

இந்த புகைப்படத்தில் 'All Smiles' என்று மட்டுமே அதர்வா குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மற்றும் அதர்வா சிரித்த முகத்துடன் இருக்கும் இந்த புகைப்படத்தை விஜய் மற்றும் அதர்வாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.