அதர்வா அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. நாயகி, இயக்குனர் பெயரும் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் அதர்வா ஜோடியாக நடிக்கும் நாயகி விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் முரளியின் மகன் அதர்வா தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதும் இருப்பினும் அவர் ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக காத்திருக்கிறார் என்பதும் தெரிந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ’பட்டத்து அரசன்’ என்ற திரைப்படத்திற்கு பின்னர் அதர்வா நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. ’நிறங்கள் மூன்று’ உள்பட 3 படங்களில் அதர்வா நடித்து வரும் நிலையில் இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்திற்கு ’டிஎன்ஏ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதர்வா ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நிமிஷா சஜயன் ஏற்கனவே ’மிஷின் சாப்டர் ஒன்’ ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்பட சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கட் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘ஒரு நாள் கூத்து’ மற்றும் ’மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் அம்பேத்கர் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் தெரிகிறது.
X
— Olympia Movies (@Olympiamovis) May 7, 2024
Two strands wind around each other to make a twister ladder !!
Here’s the Dashing First Look of #DNAmovie starring @Atharvaamurali & #NimishaSajayan 🧬🔍
Written & directed by @nelsonvenkat
Produced by @Olympiamovis @Ambethkumarmla pic.twitter.com/DI0pOrAFJG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com