close
Choose your channels

நடிகை அசோக்செல்வன் சகோதரியா இவர்? ஹீரோயின் போல் இருக்காரே..!

Saturday, August 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அசோக்செல்வன் தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இவர் ஹீரோயின் போல் அழகாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

‘சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். அதன் பிறகு அவர் ’தெகிடி’’ கூட்டத்தில் ஒருவன்’ ’ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ’போர் தொழில்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

’எனக்கு தெரிந்து வலிமையான, நெகிழ்ச்சியான, கனிவான மற்றும் கருணை உள்ள பெண் தான் எனது சகோதரி, உடன்பிறப்பே உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று கேப்ஷனையும் அசோக்குமார் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 'அசோக் செல்வனின் சகோதரி ஹீரோயின் போல் இருக்கிறார்’ என்றும் ’இப்படி ஒரு அழகான சகோதரி உனக்கு இருக்கிறதா மச்சான்’ என்றும் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment