பிரபல தயாரிப்பாளர் மகளை காதலிக்கின்றாரா நடிகர் அசோக் செல்வன்? எப்போது திருமணம்?
- IndiaGlitz, [Sunday,March 19 2023]
பிரபல தயாரிப்பாளர் மகளை நடிகர் அசோக் செல்வன் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான ‘சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ’தெகிடி’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றார். இதனை அடுத்து ’ஓமை கடவுளே உள்பட ஒரு சில படங்களில் நடித்த அசோக் செல்வன் சமீபத்தில் ’நித்தம் ஒரு வானம்’ என்ற படத்தில் நடித்தார் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாகவும் இந்த காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுவது. மேலும் அசோக் செல்வனின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் அசோக் செல்வன் தற்போது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு படத்திலும், ‘நெஞ்சமெல்லாம் காதல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.