நடிகர் ஆர்யாவின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மாஸ் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் ஆர்யா தற்போது கௌதம் கார்த்திக் உடன் இணைந்து ’மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி வருகிறார் என்பதும் திபு நிணன் தாமஸ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் ஆர்யா நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’சைந்தவ்’ . இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது
சைலேஷ் கொலனு என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆரியா ’மனஸ்’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியாகி உள்ளது. நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு திரைப்படமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Unyielding Power, Unmatched Skill & An Unstoppable Force 🔥
— Niharika Entertainment (@NiharikaEnt) August 30, 2023
Introducing the Most Versatile @arya_offl as MANAS from #SAINDHAV 💥#SaindhavOn22ndDEC ❤️🔥
Victory @VenkyMama @Nawazuddin_S@KolanuSailesh @ShraddhaSrinath @iRuhaniSharma @andrea_jeremiah @Music_Santhosh @NiharikaEnt… pic.twitter.com/5K2Hhl1d8U
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com