close
Choose your channels

ஆர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.. இயக்குனர் இவர் தான்!

Saturday, October 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா நடித்த ’கேப்டன்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

நாளை சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’விருமன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் இயக்கும் அடுத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் இதனை அடுத்து 45 நாட்கள் கோவில்பட்டி அருகே இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் தேர்வு முடிந்து விட்டதாகவும் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் ஆர்யா ஏற்கனவே நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ள நிலையில் நாளை முதல் முத்தையாவின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment