ஆர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.. இயக்குனர் இவர் தான்!

  • IndiaGlitz, [Saturday,October 08 2022]

நடிகர் ஆர்யா நடித்த ’கேப்டன்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

நாளை சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’விருமன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் இயக்கும் அடுத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் இதனை அடுத்து 45 நாட்கள் கோவில்பட்டி அருகே இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் தேர்வு முடிந்து விட்டதாகவும் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் ஆர்யா ஏற்கனவே நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ள நிலையில் நாளை முதல் முத்தையாவின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை இரவு தொடங்கப்பட இருக்கும் நிலையில் இன்று இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா? அப்ப சூர்யா என்ன ஆச்சு?

'சூரரை போற்று' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா தற்போது 'சூரரைப்போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.

மீண்டும் மேலாடையின்றி போஸ்..சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!

அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களாக அதை நிறுத்தி இருந்த நிலையில் தற்போது

மாலத்தீவு சென்ற ராஷ்மிகா மந்தனா.. அதே விமானத்தில் சென்ற பிரபல நடிகர்.. உண்மையாகிறதா கிசுகிசு?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற நிலையில் அதே விமானத்தில் பிரபல நடிகர் ஒருவரும் சென்றதை அடுத்து இருவரும் காதலிக்கிறார்கள்

ஒரே நேரத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மகன்களின் திரைப்படங்கள்: பெற்றோர் பெருமிதம்!

 அண்ணன் மோகன் ராஜா இயக்கிய 'காட்பாதர்' திரைப்படம் மற்றும் தம்பி ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மாபெரும் வெற்றி