சைக்கிளிங்கில் 400 கி.மீ? ரவுண்டு கட்டி கலக்கும் முன்னணி நடிகரின் வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காலத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் தீவிர உடற்பயிற்சியில் இறங்கி விட்டனர். இதனால் ஜிம்மில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நடிகர் ஆர்யா 400 கி.மீ சைக்கிளிங் சேலஞ்சை வெற்றிகரமாக முடித்து உள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு உள்ள ஆர்யாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பாட்டா படத்தை முடித்து விட்டு அடுத்தப் படத்திற்கு தயாராகி வரும் நடிகர் ஆர்யா கொரோனா காலத்தில் முழுநேரமும் உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங்கில் ஈடுபட்டு வந்தார். சென்னை கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்த அவர் முதற்கட்டமாக 100 கி.மீ சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. தற்போது 400கி.மீ சேலஞ்சை அவர் வெற்றிகரமாக முடித்து இருக்கிறார். இதனால் சைக்கிளிங் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட பலரும் நடிகர் ஆர்யாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இவரது சாதனைக்கு நடிகர் விவேக் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில், “டியர் ஆர்யா உங்களுடைய 400 கி.மீ சைக்கிளிங் பயணத்திற்கு வாழ்த்துகள். உடல்நலனில் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு உங்களுடைய பயணம் மிகப்பெரிய உந்துதலாக அமையும்” என்று புகழ்ந்துள்ளார். இந்த பதிவிற்கு பதில் அளித்த ஆர்யா “என்றென்றும் மாறாத உங்களது அன்புக்கு நன்றி சார்… உங்களுடைய ஊக்கம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
Thank u so much for ur everlasting love and inspiration sir ?????????? You are awesome ?? https://t.co/o0x5bgZf1q
— Arya (@arya_offl) January 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments