ஜிஎஸ்டி வரியின் புதிய சலுகைகளை கிண்டல் செய்த அரவிந்தசாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் ஒரே வரி என்ற வரிவிதிப்பு முறை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி வரியுடன் பெரும்பாலான மாநிலங்கள் தனியாக வரிவிதித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் திரையுலகினர்களுக்கு கேளிக்கை வரி என்று தனியாக விதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டத்தில் ஒருசில பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய நடிகர் அரவிந்தசாமி, 'சினிமா கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் மாநில வரி என இரட்டை வரி. ஆனால் இடைவேளையில் வாங்கி சாப்பிடும் தின்பண்டங்களுக்கு வரி குறைவு. இந்த திண்படங்களை அதிகம் சாப்பிட்டுவிட்டு உடல்நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனை சென்றால் அங்கு அதிக கட்டணம், ஏனெனில் ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்த கருவிகளுக்கு கூடுதல் வரி. ஒரே குழப்பமாக உள்ளது. தொலைக்காட்சி விவாதங்களை பார்த்துதான் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்' என்று கிண்டலுடன் கூறினார்.
மேலும் 'நான் விரும்புவது ஒரே இந்தியா, ஒரே வரி. மாநிலங்கள் தனியாக கூடுதல் வரிகள் விதிக்கக்கூடாது. அதிகபட்சம் 3 நிலை வரிகள். போகப் போக ஒரே வரி. எளிதாக வருமான வரி தாக்கல், இவை வேண்டும்' என்று அரவிந்த்சாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout