ஜிஎஸ்டி வரியின் புதிய சலுகைகளை கிண்டல் செய்த அரவிந்தசாமி

  • IndiaGlitz, [Saturday,October 07 2017]

நாடு முழுவதும் ஒரே வரி என்ற வரிவிதிப்பு முறை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி வரியுடன் பெரும்பாலான மாநிலங்கள் தனியாக வரிவிதித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் திரையுலகினர்களுக்கு கேளிக்கை வரி என்று தனியாக விதிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டத்தில் ஒருசில பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய நடிகர் அரவிந்தசாமி, 'சினிமா கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் மாநில வரி என இரட்டை வரி. ஆனால் இடைவேளையில் வாங்கி சாப்பிடும் தின்பண்டங்களுக்கு வரி குறைவு. இந்த திண்படங்களை அதிகம் சாப்பிட்டுவிட்டு உடல்நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனை சென்றால் அங்கு அதிக கட்டணம், ஏனெனில் ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்த கருவிகளுக்கு கூடுதல் வரி. ஒரே குழப்பமாக உள்ளது. தொலைக்காட்சி விவாதங்களை பார்த்துதான் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்' என்று கிண்டலுடன் கூறினார்.

மேலும் 'நான் விரும்புவது ஒரே இந்தியா, ஒரே வரி. மாநிலங்கள் தனியாக கூடுதல் வரிகள் விதிக்கக்கூடாது. அதிகபட்சம் 3 நிலை வரிகள். போகப் போக ஒரே வரி. எளிதாக வருமான வரி தாக்கல், இவை வேண்டும்' என்று அரவிந்த்சாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
 

More News

தளபதி விஜய்யின் 'மெர்சல்' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் பலவித தடைகளை தகர்த்து வரும் தீபாவளி தினம் முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஜூலியை பேசவிடாமல் கத்தி வெளியேற்றிய ஓவியா ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிக நபர்களால் விரும்பப்படும் நபர் என்ற பெயர், புகழை பெற்றவர் ஓவியா. அவர் இந்த போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் வெற்றி பெற்ற ஆரவ்வை விட அதிக ரசிகர்களை பெற்று

மோடியை திருமணம் செய்ய போராட்டம் நடத்தும் 40 வயது பெண்

பிரதமர் மோடி தனியாக இருக்கின்றார். எனவே அவரை திருமணம் செய்து நன்றாக பார்த்து கொள்வேன். மோடி தன்னை வந்து சந்திக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன்

கமல், ரஜினிக்கு இணையான நடிகர்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ்: கேப்டன் விஜயகாந்த்

தமிழகத்தின் 25வது ஆளுனராக நேற்று பதவியேற்று கொண்ட பன்வாரிலால் புரோஹித் அவர்களை சற்று முன்னர் நடிகரும் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் சந்தித்தார்.

கமல் முதலமைச்சராக வாய்ப்பு இல்லை: சாருஹாசன் பேட்டி

கமல், ரஜினி ஆகிய இருவரில் யார் அரசியலில் சாதிப்பார்கள் என்று கூறும்போது கமலுக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றதா? என்ற கேள்விக்கு 'இல்லை' என்று பதில் கூறிய சாருஹாசன்