100% ஐ விட 50% சிறந்தது: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் கருத்து!

  • IndiaGlitz, [Tuesday,January 05 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஏழு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டது என்பதும், அதுவும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரையுலகினர் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு நேற்று 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது என்பதும் இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததற்கு ஒரு சில திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அரவிந்த்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ’சில நேரங்களில் 50% என்பது 100% விட சிறந்ததாக இருக்கும், அவற்றில் இதுவும் ஒன்று’ என்று திரையரங்குகளில் 100% அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்

அரவிந்த்சாமியின் இந்த டுவிட்டுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன. திரையரங்குகள் என்பது மூடப்பட்ட ஒரு அறை என்றும், அதில் 3 மணிநேரம் ஏசியில் இருக்க வேண்டிய நிலை என்பதால் கொரோனா வைரஸ் பரவுவது அதிகமாக இருக்கும் என்றும் மற்ற தளர்வுகளோடு திரையரங்கின் தளர்வை ஒப்பிடக்கூடாது என்றும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன