இதுக்காவது அனிதா பெயர் வையுங்கள்: அரசுக்கு அரவிந்தசாமி வேண்டுகோள்

  • IndiaGlitz, [Thursday,October 26 2017]

சமீபத்தில் மாணவி அனிதா நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழக அரசு நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார் செய்ய மாவட்டந்தோறும் பயிற்சி வகுப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் அரவிந்தசாமி அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். தமிழக அரசு நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளதை அறிகிறோம். இந்த பயிற்சி திட்டத்திற்கு அனிதாவின் பெயரை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதாக அரவிந்தசாமி தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்,.

மேலும் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் இந்த பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு போட்டியை சமாளிக்க உதவிகரமாக இருக்கும் என்றும் நடிகர் அரவிந்தசாமி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கும் 'அம்மா' பெயரை அரசு வைக்காமல் 'அனிதா' பெயரை வைக்க வேண்டும் என்று பலர் அரவிந்தசாமியின் கருத்துக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்.

More News

கந்துவட்டி கொடுமையால் கடுமையாக பாதிகப்பட்ட சின்னத்திரை நடிகை புகார்

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்திற்கு பின்னர் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு வெளியே சொல்ல முடியாத பலர் தற்போது தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

நவம்பர் 7ல் கமல் இதைத்தான் செய்ய போகிறாரா?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ஆம் தேதி அதாவது அவருடைய பிறந்த நாள் அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக வெளிவந்த செய்தியை காலையில் பார்த்தோம்.

நிஜ வாழ்க்கையில் நடிக்காமல் இருப்பது ஏன்? 2.0 பிரஸ்மீட்டில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக துபாயில் நடைபெறவுள்ள நிலையில் சற்று முன்னர் சர்வதேச பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

'பிக்பாஸ்' ஆரவ் படத்தை இயக்கும் சிம்பு பட இயக்குனர்

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் ஆரவ் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மெர்சல் சென்சார் சான்றிதழ் திரும்ப பெறப்படுமா? நாளை நீதிமன்றத்தில் விசாரணை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.