விஜய்யின் 'பைரவா' படத்தில் இணையும் அருண்பாண்டியன்

  • IndiaGlitz, [Thursday,October 20 2016]

பிரபல நடிகரும் விநியோகிஸ்தருமான அருண்பாண்டியன் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
'பைரவா' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் வெளிநாட்டு உரிமையை அருண்பாண்டியனின் 'A&P குரூப்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது
விஜய்யின் தெறி' வெளிநாடுகளில் கோடிகளை குவித்த நிலையில் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ள 'பைரவா' படமும் வெளிநாடுகளில் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.