படப்பிடிப்புக்கு இடையே நாகூர் தர்காவிற்கு விசிட் அடித்த பிரபல தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான “மாப்பிள்ளை” படத்தில் அறிமுகமானவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிகர் விஜய்குமாரின் மகன் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இவர் “இயற்கை“, “பாண்டவர் பூமி” எனப்பல படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் நிலைக்கவே கடும் சிரமப்பட்டார்.
ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் வில்லனாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சத்தையும் கவர்ந்துவிட்டார். இதையடுத்து “குற்றம் 23”, “தடம்”, “மாஃபியா”, “செக்கசிவந்த வானம்”, “சகோ” போன்ற வெற்றிப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்.
அந்த வகையில் தற்போது பிரபல இயக்குநர் ஹரியுடன் இணைந்து “அருண்விஜய் 33” எனும் புது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டது. தற்போது நாகப்பட்டினத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழு ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் அருண்விஜய் படப்பிடிப்பிற்கு இடையே நாகப்பட்டினத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற தர்காவான நாகூர் தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம்பெற்று வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments