நடிகர் விஜயகுமாருக்கு என்ன ஆச்சு? அருண்விஜய் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் குறித்த வதந்தி ஒன்று மிக வேகமாக இணையதளங்களில் வைரலான நிலையில் அதற்கு அவரது மகனும் நடிகருமான அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
எம்ஜிஆர் - சிவாஜி, கமல் - ரஜினி, அஜித்-விஜய் என தலைமுறைகள் தாண்டி நடித்து வரும் பழம்பெரும் குணச்சித்திர நடிகர் விஜயகுமார் தற்போதும், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜயகுமார் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருவதை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
எனது நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். எங்கள் அப்பா விஜயகுமார் வீட்டில் ஆரோக்கியமாக உள்ளார். தயவு செய்து அவர் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளதோடு, விஜயகுமாருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதனை அடுத்து விஜய் குமார் உடல்நிலை குறித்து பரவிய செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
To all my friends, family and fans.. Appa is hale and HEALTHY at home.
— ArunVijay (@arunvijayno1) December 22, 2022
Kindly do not believe any rumors!
Thank you for all your concern and love! ❤️ pic.twitter.com/oKm4a306lG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments