'யானை' படம் குறித்த மாஸ் அப்டேட்டை வெளியிட்ட அருண்விஜய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகிய 'யானை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் மே மாதம் என்று கூறப்பட்டு அதன் பின் ஜூன் 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த படத்தின் ட்ரெய்லர் மே 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். அருண்விஜய், ஹரி இணைந்த இந்த திரைப்படத்துக்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த டிரைலர் வெளியானால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Electrifying #Yaanai ?? trailer to be out on May 30th @ 6 PM#YaanaiTrailer
— ArunVijay (@arunvijayno1) May 28, 2022
Hitting the screens from June 17th.
#YaanaiFromJune17 @arunvijayno1 #DirectorHARI @DrumsticksProd @priya_Bshankar @realradikaa @iYogibabu @gvprakash @thondankani @Ammu_Abhirami @gopinath_dop @ertviji pic.twitter.com/NjTxBxMqiA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments