சாலையோர கடையின் சமையல் மாஸ்டராக மாறிய அருண்விஜய்! வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அருண்விஜய் சாலையோர கடை ஒன்றின் சமையல் மாஸ்டர் ஆனது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் பழனி சென்ற அருண்விஜய் அங்கு நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு தற்போது மீண்டும் படக்குழுவினருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் பழனியில் உள்ள ரோட்டு கடை ஒன்றில் உணவு அருந்திவிட்டு அந்த கடையின் பெண் உரிமையாளர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் கையில் கரண்டியை வைத்துக்கொண்டு சமையல் மாஸ்டர் போல போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பதாவது:
ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!! இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.. என்று கூறியுள்ளார்.
ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!!
— ArunVijay (@arunvijayno1) August 22, 2021
இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது..#letsspreadlove #AV33?? pic.twitter.com/6hsZEvQxUr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments