close
Choose your channels

நடிகர் அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

Saturday, November 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என அவரது குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளன.

நடிகர் அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பூர்வி என்ற மகளும் அர்னவ் விஜய் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜய், அவரது மனைவி, மகள் மற்றும் மகன் உள்ள குடும்ப புகைப்படம் மற்றும் நடிகர் அருண்விஜய், நடிகர் விஜயகுமார், இயக்குனர் ஹரி குடும்பத்தினர் உள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்தில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். பாவாடை தாவணியில் டீன் ஏஜில் இருக்கும் அவரது மகள் மற்றும் வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் இருக்கும் அவரது மகன் புகைப்படத்தை பார்த்து இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அருண் விஜய் தற்போது பார்டர், யானை, அக்னிசிறகுகள், பாக்சர் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் பிஸியான ஹீரோக்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment