'கனா' நாயகனுடன் கைகோர்க்கும் பிரபல நடிகரின் மகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த 'கனா' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தர்ஷன், அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் அறிமுகமாகவுள்ளார். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது
தனது முதல் படம் குறித்து கருத்து தெரிவித்த கீர்த்தி பாண்டியன், 'நான் கடந்த ஐந்து வருடங்களாக எனது தந்தையின் சிங்கப்பூர் நிறுவனத்தை கவனித்து வந்தேன். இருப்பினும் எனக்கு நடிக்க வேண்டும் என்பதுதான் கனவு. இதற்காகவே நான் என்னுடைய தகுதியை கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்த்து கொண்டேன். ஏற்கனவே எனக்கு பல வாய்ப்புகள் வந்தன. அந்த படங்கள் எல்லாம் வெளியாகி சூப்பர் ஹிட்டும் ஆனது. ஆனால் அந்த படங்களில் எனக்கு சொன்ன கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு சாதாரண நாயகியாக நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். தற்போது இந்த படத்தின் கேரக்டர் எனக்கு திருப்தி அளித்துள்ளதால் நடிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments