அருள்நிதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,May 19 2022]

நடிகர் அருள்நிதி தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்நிதி நடிப்பில், விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’டி பிளாக்’. த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

இந்த நிலையில் இந்த படம் ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருள்நிதி ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்த இந்த படத்தில் கரு பழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ்கண்ணா, உமா ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். ரான் எதான் யோஹன் இசையமைப்பில் உருவான இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது.