அருள்நிதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: கையில் அரிவாளுடன் ஆவேசமான ஃபர்ஸ்ட்லுக்..!

  • IndiaGlitz, [Thursday,March 16 2023]

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில் கையில் அருவாளுடன் ஆவேசமாக இருக்கும் அருள்நிதியின் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

‘வம்சம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகமான அருள்நிதி அதன் பின்னர் ’மௌனகுரு’ ’தகராறு’ ’டிமான்டி காலனி’ ’பிருந்தாவனம்’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ’டிமான்டி காலனி 2’ ‘திருவின் குரல்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அருள்நிதி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’கழுவேத்தி மூர்க்கன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கௌதம ராஜ் என்பவரின் இயக்கத்தில், டி இமான் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் அருவாளுடன் ஆவேசமாக இருக்கும் அருள்நிதியின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் ரிலீஸ் செய்த இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் நடித்த நடிகை துஷாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.