நடிகர் அருள்நிதி வீட்டில் குட்டி தேவதை: குவியும் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்கும் மிகச் சில நடிகர்களில் ஒருவர் அருள்நிதி என்பதும் இவரது அனைத்து படங்களின் கதைகளும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்ட அருள்நிதிக்கு மகிழ் என்ற மகன் இருக்கும் நிலையில் மீண்டும் அவரது மனைவி சமீபத்தில் கர்ப்பம் ஆனார் என்பதும் நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து நடிகர் அருள்நிதி தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஒரு குட்டி தேவதை எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். மகிழ் அண்ணா, அம்மா அப்பா ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நடிகர் அருள்நிதிக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
We welcome our new love .. our kutti devathai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
— Arulnithi tamilarasu (@arulnithitamil) November 28, 2021
Born on 27.11.2021
Love
Magizh Anna, Amma and Appa??????
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments