படு மோசமான கார் விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,January 24 2022]

ஹாலிவுட் ஜாம்பவான் நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் மோசமான கார் விபத்தில் சிக்கி எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியிருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபாடி பில்டிங்கில் உலகச் சாதனை படைத்த நடிகர் அர்னால்ட் கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னராகவும் இருந்துள்ளார். ஹாலிவுட் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இவர், கடைசியாக கடந்த 2019இல் வெளியான “டெர்மினேட்டர் டார்க்பேட்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இந்த வருடம் இவரின் “குங் ப்யூரி 2“ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் 74 வயதான நடிகர் அர்னால்ட் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் சன்செட் பவுல்வர்ட் பகுதியிலிருந்து அலென்ஃபோர்ட் அவென்யூவிற்கு தனது GMC Yukon பெரிய காரில் சென்றுள்ளார். இந்தக் கார் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது இவருக்கு முன்னாள் இருந்த 2 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருக்கிறது. இதனால் அர்னால்ட் வந்த காரும் நிலைதடுமாறி தனக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த ஒருசிறிய காரின் மீதேறி இருக்கிறது. இந்த விபத்தில் நடிகர் அர்னால்ட்டுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் அர்னால்ட் ஏற்றிய ஒரு சிறிய காரில் இருந்து ஒரு பெண் தலையில் சிராய்ப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விபத்து காரணமாக இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. மேலும் அர்னால்ட் விபத்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்துக்குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அர்னால்ட்டின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சாலை விபத்தில் நடிகர் அர்னால்ட்டுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அவல் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.