கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டும் பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் படு மோசமான நிலையை இருக்கும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறி கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் இறுதிச் சடங்குக்கும் உதவி செய்து வருகிறார்.

யுவரத்னா, ரஸ்டம், ஒடியா, ஆ துருஷ்யா உட்பட சில படங்களில் உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தவர் பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா. இவர் கடந்த 2 மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பை விட்டுவிட்டு கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார்

புரொஜக்ட் ஸ்மைல் என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம் கொரோனா நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு ஆம்புலன்ஸை ஓட்டி வருகிறார். அதுமட்டுமின்றி உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் இறுதிச்சடங்கு செய்யவும் உதவி செய்து வருகிறார்

மேலும் தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்., இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அவருக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More News

தமிழ் பெண்ணின் மாஸ்க் ஸ்டைல பாருங்க… இளம் நடிகையின் அட்டகாசமான புகைப்படம் வைரல்!

தமிழில் ஆஸ்தான நடிகரான கமல்ஹாசனின் மூத்தமகள் நடிகை ஸ்ருதிஹாசன்.

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர்....! அதிரடி கைது...!

சென்னையில் ரெம்டெசிவர் மருந்தை  கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டாக்டர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்து நிற்கிறோம்: ஏஜிஎஸ் உருக்கமான அறிக்கை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமான செய்தி அனைவரின் மனதிலும் இடியாய் இறங்கியது. தமிழ் திரையுலகமே

நேற்றுவரை புதிய படம் குறித்து பேசி கொண்டிருந்தார்: கே.வி. ஆனந்த் மறைவுக்கு சிம்பு இரங்கல்

பிரபல இயக்குநர் கேவி ஆனந்த் அவர்கள் திடீரென இன்று அதிகாலை காலமானதால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேவி ஆனந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக

ஆக்சிஜன் வாங்க ரூ.1 கோடி நிதியுதவி செய்த இந்திய கிரிக்கெட் வீரர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.