கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணையும் 'மாஸ்டர்' நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ‘மாஸ்டர்’ மற்றும் ‘கைதி’ படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதிரடி ஆக்சன் திரைப்படமான ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அரசியல் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிறந்தநாள் வாழ்த்துகள் ரம்பா…  வியப்பூட்டும் குட்டி பயோகிராபி!

90களில் வெளியான திரைப்படங்களில் அதிகம் விரும்பப்பட்ட ஒரு முகம் நடிகை ரம்பா.

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தமிழ் நடிகைகள்: மூவர் கைது

இரண்டு தமிழ் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகையுடன் கிளாமர் போஸ்: வைரலாகும் ராம்கோபால்வர்மா புகைப்படம்

ஒரு காலத்தில் அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி வந்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது அதிரடியாக கிளாமர் படங்களை இயக்கி வருகிறார். அவரது படங்கள் ஓடிடியில் நல்ல வரவேற்ப்பை பெற்று

வெங்கையா நாயுடு டுவிட்டர் புளூ டிக் சர்ச்சை...! என்ன ஆச்சு...!

குடியரசுத்தலைவர் வெங்கையா நாயடு-வின், டுவிட்டர் கணக்கில் இருந்து ப்ளு டிக் நீக்கப்பட்டதாக கிளம்பிய சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சிம்பு, தனுஷ் நாயகியின் குழந்தை புகைப்படம்: ரசிகர்கள் வாழ்த்து!

சிம்பு நடித்த 'ஒஸ்தி' தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரிச்சா.