அஜித்தால் அப்புக்குட்டிக்கு கிடைத்த அமெரிக்க வாய்ப்பு

  • IndiaGlitz, [Sunday,August 28 2016]

சுசீந்திரன் இயக்கிய 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, அஜித் நடித்த 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அப்புக்குட்டிக்காக அஜித், ஒரு ஸ்பெஷல் போட்டோஷூட்டிங் நடத்தியுள்ளார் என்பது தெரிந்ததே.
இந்நிலையில் அஜித் தற்போது நடித்து வரும் 'தல 57' படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்கும் 'தல 57' குழுவினர் சென்னை திரும்பியதும் அப்புக்குட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அப்புக்குட்டியின் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அப்புக்குட்டியும் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.

More News

'விஜய் 60' பட நாயகி திடீர் காயம். மருத்துவமனையில் அனுமதி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பாப்ரி கோஷ் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருவது அறிந்ததே

வைரமுத்துக்கு கிடைத்த 2வது சர்வதேச அங்கீகாரம்

தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்ற கவியரசு வைரமுத்து எழுதிய 'வெள்ளை பூக்கள் என்ற தமிழ் பாடல் ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரஹ்மானால் பாடப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றிருந்தது

'ரெமோ' இசையில் மேலும் ஒரு புதுமை. அனிருத் இசையில் பாடிய பிரபலம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரெமோ' திரைப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் ஜெயம்ரவி

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியினை சற்று முன்னர் பார்த்தோம்...

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்திற்கு மாஸ் ஹீரோ தயார்.

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் ஷங்கரின் எந்திரன்...