close
Choose your channels

'பீஸ்ட்' படக்குழுவினர்களிடம் வருத்தம் தெரிவித்த பிரபல நடிகர்!

Monday, July 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'பீஸ்ட்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த நடிகர் ஒருவர் தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பீஸ்ட்’ .இந்த திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த போதிலும் இந்த படத்திற்கு ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தன என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தப் படத்தில் நடித்த நடிகர் ஒருவரே இந்தப் படத்தின் காட்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

'பீஸ்ட்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ என்பவர் தான் நடித்த காட்சியை கூறியபோது ’பொதுவாக, ஒரு எடையை ஒருவர் தூக்கினால், அவரது முகத்தில் ஒரு சிரமம் தெரியும். ஆனால் விஜய் என்னை சூட்கேஸில் வைத்து தூக்கும்போது, அப்படி எதையும் முகத்தில் காட்டவில்லை. அது விஜய் அவர்களின் குற்றமில்லை, படக்குழு தான் காரணம் என்று கிண்டல் செய்திருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் இது குறித்த கேள்வியை கேட்டபோது, ‘நான் ஊடகங்களில் பேசியதற்கு மிகவும் வருந்துகிறேன். இது எனது தவறுதான். எதையும் அல்லது யாரையும் மோசமாக பேசுவது அந்த விஷயத்தை விரும்பும் நபரை அல்லது அந்த நபரை நேசிப்பவர்களை மிகவும் காயப்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment