அமிதாப் குடும்பத்தை அடுத்து அனுபம்கெர் குடுபத்தில் நால்வருக்கு கொரோனா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தில் உள்ள அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகிய நால்வருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது பழம்பெரும் பாலிவுட் நடிகர் அனுபம்கெர் குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாலிவுட் திரையுலகில் ஏராளமான படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து வருபவர் அனுபம்கெர். தமிழில் பிரபுதேவா நடித்த ‘வி.ஐ.பி. என்ற படத்தில் சிம்ரனின் தந்தையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அனுபம்கெர் தனது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எனது தாயார் துலாரிக்கு லேசான கொரோனா பாதிப்பு காணப்பட்டதை அடுத்து அவரை நாங்கள் கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம். மேலும் எனது சகோதரர், அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர்களுக்கும் லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் அவர்கள் வீட்டிலேயே தங்களை சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தி கொண்டுள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் எனக்கும் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்’ இவ்வாறு அனுபம்கெர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
This is to inform all that my mother Dulari is found Covid + (Mildly). We have admitted her into Kokilaben Hospital. My brother, bhabhi & niece inspite of being careful have also tested mildly positive.I got myself tested as well & I have tested negative. @mybmc is informed.!?? pic.twitter.com/EpjDIALft2
— Anupam Kher (@AnupamPKher) July 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout