கருணாசுக்கு திருவாடனை தொகுதி மக்கள் தெரிவித்த எதிர்ப்பு.

  • IndiaGlitz, [Saturday,February 25 2017]

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஆட்சி பொறுப்பை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள போதிலும் மதில் மேல் பூனையாகத்தான் ஆட்சியின் நிலை உள்ளது. 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் தற்போது 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அரசுக்கு உள்ளது. 5 எம்.எல்.ஏக்கள் தடம் மாறிவிட்டால் ஆட்சி அம்போதான்.

இந்நிலையில் அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் கோடிக்கணக்கான பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் வெறுப்பில்தான் உள்ளார்கள் என்பது சமீபத்திய சம்பவங்களில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் எனக்கு ஓட்டு போட்டவர்கள் 75000 பேர்கள் தான். எனவே எனக்கு ஓட்டு போடாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் கேள்வி கேட்க உரிமை இல்லை என்று பக்குவமற்ற முறையில் நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் பேசி வருகிறார். மூத்த அமைச்சர்களே மக்களின் அதிருப்தி குறையும் வரை அடக்கி வாசித்து வரும் நிலையில் முதன்முதலில் எம்.எல்.ஏ ஆகியுள்ள கருணாஸ் முதிர்ச்சியற்ற நிலையில் பேசி வருவது அதிமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் வெறுப்படைய செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று தொகுதிக்கு சென்ற கருணாசுக்கு பொதுமக்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற கருணாசை மாலை போட விடாமல் விரட்டி அடித்ததாகவும் செய்திகள் வந்துள்ளது.

இனிமேலாவது கருணாஸ் தொகுதி மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு, ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமின்றி தொகுதி மக்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் என்ற முறையில் செயல்படுவது அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நல்லது என்பது நம்முடைய தாழ்மையான வேண்டுகோள்

More News

வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம் திடீர் ரத்துக்கான காரணம். அதிர்ச்சி தகவல்

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கும் சந்தோஷ் அவர்களுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இவ்வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இந்த திருமணம் திடீரென நின்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி.

புனே நகரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

ஜெ. மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய பெண் கைது

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

கபாலி' நஷ்டம் என திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டுவது ஏன்? தாணு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் உள்பட சமீபத்தில் வெளியான பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள் அனைத்தும் விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் என்றும், இந்த படங்களின் வசூல் விபரங்கள் பொய்யானவை என்றும் சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியிருந்தார்.

பாவனா சம்பவத்திற்கு பின்னர் அதிரடி முடிவு எடுத்த பிரபல நடிகர்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவத்திற்கு முதன்முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் நடிகர் பிரித்விராஜ்