நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன்: போலீசில் வாக்குமூலம் கொடுத்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,June 02 2022]

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன் என நடிகை அளித்துள்ள பாலியல் புகார் குறித்து போலீசாரிடம் பிரபல நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள நடிகை ஒருவர், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், விஜய்பாபு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் திரும்பிய நடிகர் விஜய் பாபு போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது ’என் மீது புகார் கூறிய நடிகையை எனக்கு முன்பே தெரியும் என்றும், அடிக்கடி அவர் என் வீட்டிற்கு வருவார் என்றும், அவருடைய சம்மதத்துடன் தான் இருவரும் உறவு கொண்டோம் என்றும் கூறினார்.

எனது படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தாலும் எனது தொழில் எதிரிகள் தூண்டிவிட்டதாலும் தான் நடிகை புகார் கொடுத்துள்ளார் என்றும் இந்த வழக்கு தொடர்பாக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் போலீஸ் விசாரணையின் போது நடிகையுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் போலீசாருக்கு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

Priya Bhavani Shankar reveals what stopped her from getting married at a young age

Actress Priya Bhavani Shankar who started her career as a newsreader got a chance to play the female lead in the television serial 'Kadhal Mudhal Kalyanam Varai' on Vijay TV. 

I am now in Pavni Reddy's control - Amir's frank statement in front of Kamal Haasan

Amir and Pavni Reddy became friends on 'Bigg Boss 5' hosted by Kamal Haasan and Simbu and showed great chemistry on the show.  Later they have joined hands for 'BB Jodigal 2'

Vijay Sethupathi to play villain to another big superstar after 'Vikram' ?

Vijay Sethupathi never tires of surprising his fans with his choice of movies and this year itself they have been treated to completely different shades of characters. 

Shocking! Student dies after eating Tandoori Chicken

A 17-year-old Class XII student reportedly died after consuming tandoori chicken from a hotel in Arani near Tiruvannamalai

Kamal Haasan made Anirudh cry for the first time in his musical career

Kamal Haasan's new movie 'Vikram' is releasing tomorrow June 3rd and advance bookings reports around the world suggest one of the biggest openings of the year